“தளபதி-ய அசிங்கப்படுத்திட்டு இப்போ அவர் டைட்டில் மட்டும் வேணுமா” – விஜய் ரசிகர்கள்

  • Comali
  • Kollywood
  • Love today
  • Thalapathy
  • Vijay
CM / Updated: 2022-07-05
14:46 IST

“கோமாளி” பட இயக்குனர் பிரதீப் ரங்கனாதனின் அடுத்த படைப்பிற்கான முதல் பார்வை சமீபத்தில் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்தது. தளபதி விஜய் நடித்த “பிகில்” படத்தை தயாரித்த ஏ. ஜி. எஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குனர் பிரதீப் ரங்கனாதன் இந்த திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். அதிக எதிர்பார்புடன் வெளிவந்த இத்திரைப்படத்தின் முதல் பார்வை, தளபதி விஜய் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை உண்டாக்கியது. அதற்கு காரணம் தளபதி விஜய்யின் சூப்பர் ஹிட் படத்தின் டைட்டிலை உபயோகித்தது  மட்டுமல்ல, கடந்த காலத்தில் இயக்குனர் பிரதீப் விஜய்யின் படங்கள் குறித்து போட்ட ட்வீட்கள் தான்.

Image

பிரதீப் ரங்கனாதனின் முதல் படமான “கோமாளி”, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று மாபெரும் வெற்றியடைந்தது. அதனைத் தொடர்ந்து அவரின் அடுத்த படைப்பிற்கான அறிவிப்புகள் அவ்வப்போது வெளிவந்து கொண் கொண்டிருந்தன. முதலில் ஏ. ஜி. எஸ் நிறுவனம் பிரதீப் உடன் கூட்டணி சேர்வது குறித்து அறிவிப்பை வெளியிட்டது.

திங்கட்கிழமை அன்று தயாரிப்பு நிறுவனமும், இயக்குனரும் படத்தின் தலைப்பு “லவ் டுடே” என்று அறிவித்தனர். இது தளபதி விஜய்யின் 1997-ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் படத்தின் தலைப்பாகும். விஜய்யுடன் சுவலட்சுமி, ரகுவரன், கரண், ஸ்ரீ மான் மற்றும் பலர் நடித்திருந்தனர். அத்திரைப்படம் ஒரு தலைக் காதலின் ஆழத்தையும் அதனால் ஒரு இளைஞன் சந்திக்கும் இழப்புகளையும் காட்டும் படமாக அமைந்தது. பாடல்களும் அப்படத்திற்கு மிகுந்த பலமாக,இன்றுவரை ரசிக்கும்படி அமைந்தது.

ஏ. ஜி. எஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ச்சனா கல்பாத்தி தளபதி விஜய்க்கும் , “லவ் டுடே” தயாரிப்பாளர் ஆர். பி சௌத்ரி-க்கும் நன்றி கூறி ஒரு ட்வீட் போட்டது குறிப்பிடத்தக்கது.

வெளியான இரண்டு போஸ்டர்களிலும், பிரதீப் குமார் வாயில் சிகரெட்டும், கையில் தனது காதலியின் செல்போனுமாக காணப்பட்டார். போஸ்டர்களை வெளியிடும்போது இயக்குனரும், நடிகருமான பிரதீப் ரங்கனாதன், தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி சொல்லியதோடு “இத்திரைப்படத்தை என்னை விட்டுச் சென்ற பெண்ணுக்காக சமர்ப்பிக்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவைக் கண்ட பெரும்பாலான விஜய் ரசிகர்கள், பிரதீப் மீது தங்களுக்கு இருக்கும் அதிருப்தியை வெளிப்படுத்த தொடங்கினர். அது தங்கள் தளபதியின் டைட்டிலை பிரதீப் உபயோகப் படுத்துகிறார் என்பதற்காக கோபம் அல்ல என்பது அவர்கள் பகிர்ந்த ஸ்க்ரீன்ஷாட்டுகள் மூலம் தெரிய வந்தது.

2014- ஆம் ஆண்டு, தான் இயக்குனர் ஆவதற்கு முன்பு, மார்ச் 29-ஆம் தேதி, திரைப்பட விமர்சகர் ப்ரஷாந்தின் ஒரு ட்வீட்டுக்கு ரிப்ளை செய்த பிரதீப், அதில் விஜய்யின் “சுறா” படத்தை மட்டம் தட்டி பேசியிருக்கிறார். “ஜில்லா படத்தின் டப்பிங் நன்றாக உள்ளது” என்று சொன்ன ப்ரஷாந்திடம், “அடப்பாவி, சுறா பார்ட் 2 மாதிரி இருந்துச்சு டப்பிங்.. உன் ரசனை என்ன-னு எனக்கு தெரியும் சுறா ரசிகரே” என்று ரிப்ளை செய்திருக்கிறார்.

a 5

“லிங்கா” படத்தின் டிக்கெட்டுகள் சுலபமாக கிடைக்கிறது, கத்தி படத்திற்கு இரண்டாவது வாரம் கூட டிக்கெட் கிடைக்கவில்லை என்று சொன்ன நபருக்கு “கத்தி” டிக்கெட் தனக்கு முதல் நாள் சுலபமாக கிடைத்ததாகவும், “லிங்கா” முதல் மூன்று நாட்கள் தொடுவதே முடியாத காரியமாக இருந்ததாக தனது கமெண்டின் மூலம் சொல்லியிருக்கிறார் பிரதீப்.

a 6

இதனை அறிந்த விஜய் ரசிகர்கள் “எங்கள் தளபதியின் கஷ்ட காலத்தில் அவரை அசிங்கப்படுத்திவிட்டு இப்போது அவர் டைட்டிலே வேண்டுமா” எனக் கேட்டு பிரதீப்பிடம் தங்களுக்கு இருக்கும் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Related Post

Kriti Sanon Is A Wrong Person To Play Sita Role ?? Internet Reacts

Keerthy Suresh Got Upset While Answering To This Question Of Her Follower!!

Ruturaj Gaikwad Got Slammed For Skipping WTC For His Marriage !!

Sameena Of “Jio Cinema” Fame Replied To RCB Fans Who A*used Her !!

Deepika, This Feels Different – Raja Vetri Prabhu’s Emotional Post For His Wife

Siva Manasula Sakthi Jiiva’s Sister Is A Mother Now!!!