“யூடியூப்-ல இருந்து எனக்கு வர வருமானம் இவ்வளவு தான்” – டி. டி. எப் வாசன்
Written by Dhiwaharan Published on Jul 05, 2022 | 23:43 PM IST | 76
Follow Us

தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்துடன் , யூட்டியூப்பில் பைக் ரைடிங் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர் தான் டி. டி. எப். வாசன். 22 வயதான இவர் 27 லட்சத்துக்கும் மேலான சப்ஸ்க்ரைபர்கள் கொண்ட தனது யூடியூப் பக்கத்தின் மூலம் கிடைக்கும் வருவாயை சமீபத்திய பேட்டி ஒன்றின் மூலம் முதல் முறையாக மனம் திறந்துள்ளார். தனது யூடியூப் பக்கம் மற்றும் அதில் போடும் வீடியோக்களுக்காக வாங்கிய சூப்பர் பைக்குக்காக ஆகும் செலவுகள் பற்றியும் அந்த பேட்டியின் மூலம் பகிர்ந்துள்ளார் வாசன்.
சமீபத்தில் தனது பிறந்த நாளை 8000-த்திற்கும் மேற்பட்ட ரசிகர்களோடு கொண்டாடியதன் மூலம் சமுக வலைத்தள பயன்பாட்டாளர்களின் கவனத்தை ஈர்த்தார் வாசன். அதுவரை தனது ரசிகர்கள் மத்தியில் மட்டுமே பிரபலமான அவரது பைக் சாகச வீடியோக்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பிறர் கண்ணிலும் பட ஆரம்பித்தது. இதனால் வாசனின் பைக் சாகச வீடியோக்களுக்கு எதிராக எதிர்ப்புகளும் வர ஆரம்பித்துள்ளது.
ஆனது ஆகட்டும் பார்த்துகிறலாம்! @tnpoliceoffl
TTF Vaasan is highly injurious to the Young Society! TN bike Vlog Youtube channels should be invigilated. 1/3 pic.twitter.com/t1TSxMkqjC— Tr Gayathri Srikanth (@Tr_Gayathri) July 3, 2022
தந்தி டிவி-க்காக தான் கொடுத்த பேட்டியில், தனது ரசிகர்களுக்காக ஒரு ஸ்டேடியமோ அல்லது ஒரு ஆடிட்டோரியமோ ஏற்பாடு செய்ய முடியாதது குறித்து வருத்தம் தெரிவித்தார் வாசன். வரும் நாட்களில் தனது ரசிகர்கள் “மீட்டப்பை” இன்னும் தரமாக நடத்துவது குறித்தும் நம்பிக்கை தெரிவித்தார். இதுவரை தான் சென்று வந்த பைக் ரைடுகளில் சந்தித்த சவால்கள் பற்றியும் அந்த பேட்டியில் மனம் திறந்தார் டி. டி. எப் வாசன்.
“ஒரு முறை என் இரு நண்பர்களுடன் நேபால் ரைட் சென்றிருந்த போது, அவர்கள் இருவரும் ஒரு அவசர காரணமாக உடனே ஊருக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. நான் தனியாக தமிழ்நாடு திரும்பிக் கொண்டிருந்த போது என் பைக் பிரேக் டவுன் ஆகி நின்று விட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் பதறிய நிலையில் அங்குள்ள மக்கள் ஒன்று கூடி எனக்காக உதவினார்கள்”
Two minutes of silence for those who don’t have a clue about this part of TN and beloved Vasan TTF Anna.#HappyBirthdayVasanTTF pic.twitter.com/wURZngHou5
— Why so serious? (@Piliral) July 1, 2022
“எனக்கு ஹிந்தி தெரியாது, இங்கிலிஷ்-ம் ஓரளவு தான், ஆனாலும் அவர்களிடம் என்னைப்பற்றி கூறி புரிய வைத்தேன். எனது இரண்டு மில்லியன் சப்ஸ்க்ரைபர்களை பார்த்த அவர்கள் ஆச்சரிய பட்டதோட இல்லாமல், எனக்காக எங்கெங்கோ சென்று வெல்டிங் மிஷன் கொண்டு வந்து என் பைக்கை சரி செய்து அனுப்பி வைத்தார்கள்” என்று கூறினார் வாசன்.
தனது யூடியூப் வருமானம் குறித்து பேசும்போது, வாசன் “நான் இதுவரை எனது வருமானத்தை எங்கேயும் பகிர்ந்து கொண்டதில்லை. பகிர்ந்து கொள்ளவும் முடியாது. அது போன்ற நிலையில்லா ஏற்ற இறக்கங்கள் இருக்கும்” என்று கூறிய வாசன் தனது யூடியூப் வருமானம் குறித்து நிலவும் வதந்திகளை கிண்டலடிக்கும் விதமாக “முதலில் 13 லட்சம் என்றார்கள், இப்போத 30 லட்சம் என்கிறார்கள், பிறகு ” ஒரு கோடி அப்பு” என்பார்கள் ” என்று சிரித்தார்.
மேலும் அதுபற்றி பேசுகையில் “எனக்கு மாதம் ரூ. 2 முதல் ரூ 2.5 லட்சம் வருமானம் வருகிறது யூடியூப்-ல் இருந்து. அது நான் போடும் வீடியோக்களின் எண்ணிக்கை பொறுத்து மாறுபடும். ஆனால் அதற்கு ஏற்ப செலவும் இருக்கும். பெட்ரோல், உணவு, வேறு ஊர்களுக்கு செல்லும் போது அதற்கான அனுமதி, அந்த ஊருக்கான தேவைகள், பைக் பராமரிப்பு போன்ற செலவுகள் இருக்கும்” என்கிறார் வாசன்.
“எனது பைக்கின் விலை ரூ. 11 லட்சம். ஷோரூமில் கடன் வாங்கினால் அதற்கான தவணை வட்டி அதிகமாக இருக்கும் என வெளியில் இருந்து கடன் வாங்கினைன். சூப்பர் பைக்குகள் பொறுத்த வரை மைலேஜ் மிகப்பெரிய பிரச்சினை, என் பைக் பத்து கிலோமீட்டர் மைலேஜ் தான் தருகிறது. இப்போ புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் அந்த 2 லட்சம் எங்கே செலவிடப்படுகிறது என்று” என்று கூறி சிரிக்கிறார் வாசன்.
தனது எதிர்கால திட்டங்கள் குறித்து பேசுகையில், தனக்கு பைக்கில் லண்டன் டூர் போக மிகவும் ஆசை என தெரிவித்துள்ளார் வாசன். மேலும் தனது அம்மாவிடம், இன்னும் இரண்டு வருடத்தில் டி. டி. எப்- பை ஒரு பிராண்டாக மாற்றிவிட்டு தானும் விவசாயத்தில் உதவுவதாக வாக்களித்ததாக சொல்கிறார் வாசன்.
வீடியோ இதோ :
Credits : Thanthi TV
Comments: 0